சவுதி அரேபியாவில் ஆப்பிள்- அமேசான் நிறுவனங்கள் முதலீடு

Report Print Kavitha in நிறுவனம்
41Shares
41Shares
ibctamil.com

சவுதி அரேபியாவில் நேரடியாக முதலீடு செய்ய ஆப்பிள்- அமேசான் நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளன.

இதற்கான லைசென்ஸை பெறுவது குறித்து சவுதி அரேபியாவின் வெளியுறவு வர்த்தக முதலீடு குழுமம் ‘சாகியா’வுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன.

ஆப்பிள் நிறுவனத்தை பொறுத்தவரை வருகிற பிப்ரவரியில் ‘சாகியா’ அமைப்புடன் முதலீடு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை தொடர்ந்து 2019-ம் ஆண்டில் சில்லரை விற்பனை நிலையங்கள் தொடங்கப்படுகிறது.

‘அமேசான்’ நிறுவனத்தின் பேச்சு வார்த்தை தொடக்க நிலையில் உள்ளது, எனவே ஒப்பந்தம் எப்போது நடைபெறும் என்று உறுதியாக கூற முடியாத நிலை உள்ளது.

கச்சா எண்ணையின் விலை சரிவால் சவுதிஅரேபியாவின் பொருளாதாரம் சரிவை சந்தித்தது, இதற்காக பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்