ஒரே இரவில் மில்லியனர்கள் ஆன 3,000 பேர்: எப்படி தெரியுமா?

Report Print Arbin Arbin in நிறுவனம்
325Shares
325Shares
ibctamil.com

இந்தியாவில் மதிப்பு வாய்ந்த 8 வங்கிகளில் ஒன்றான பந்தன் வங்கியின் ஊழியர்கள் 3,000 பேர்தான் ஒரே இரவில் மில்லியனர்களான அதிர்ஷ்டசாலிகள்.

இந்தியாவின் கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பந்தன் வங்கியானது சமீபத்தில் IPO எனப்படும் பொது பங்குகளை வெளியிட்டது.

இதனால் குறித்த வங்கியின் ஒரு பங்கின் விலையானது சுமார் 499 ரூபாய் என உயர்வை சந்தித்தது. இதனால் பந்தன் வங்கியின் தொடக்ககால ஊழியர்கள் 3,000 பேர் ஒரே இரவில் மில்லியனர்களாக மாறியுள்ளனர்.

பந்தன் வங்கியின் 3,000 ஊழியர்கள் வைத்திருக்கும் பங்கின் மதிப்பு ரூ.6,710 கோடியாக இருக்கிறது. 2001 ஆம் ஆண்டு சந்திர சேகர் கோஷ் மற்றும் 30 ஊழியர்களின் சிறிய முதலீட்டால் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனமாக தொடங்கப்பட்ட பந்தன் வங்கி, சந்தை முதலீடுகள் அடிப்படையில் இன்று இந்தியாவின் எட்டாவது மதிப்பு வாய்ந்த வங்கியாக உயர்ந்துள்ளது.

பந்தனின் தொடக்ககாலத்தில் ஊழியர்கள் அதிகம் பேர் முதலீடு செய்ய விரும்பியதைத் தொடர்ந்து பந்தன் ஊழியர்கள் பொதுநல அறக்கட்டளையை சந்திர சேகர் கோஷ் உருவாக்கினார்.

2014 ஆம் ஆண்டு வங்கி உரிமம் பெறுவதற்கு முன்பாகவே உலக வங்கியின் துணை நிறுவனமான இன்டர்நேஷனல் பைனான்ஸ் கார்பரேஷனிடமிருந்து அந்நிய முதலீடுகளை பந்தன் பெற்றது. தொடர்ந்து தனது ஊழியர்களை ஊக்கப்படுத்துவதற்காக ஊழியர் பங்கு வாய்ப்புகளை 3,000 பணியாளர்களுக்கு பந்தன் வங்கி வழங்கியது.

தொடக்க காலத்தில் பந்தன் வங்கியில் முதலீடு செய்தவர்கள் 10,000 ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரையான மிகவும் குறைவான தொகையையே செலுத்தியுள்ளனர்.

பந்தன் வங்கியின் மொத்த பணியாளர் எண்ணிக்கை 28,000 ஆகும். மட்டுமின்றி தற்போது பந்தன் வங்கியின் மொத்த மதிப்பு 55,859 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்