ஹேக் செய்யப்பட்டு 60 மில்லியன் டொலர்கள் திருட்டு: அதிர்ச்சியில் ஒன்லைன் நிறுவனம்

Report Print Kabilan in நிறுவனம்

ஜப்பானில் பணப்பரிவர்த்தனைகளை செயல்படுத்திவரும் ஒன்லைன் நிறுவனம் ஒன்றின் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு, சுமார் 60 மில்லியன் அமெரிக்க டொலர்கள் திருடப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் ஒசாகா நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ஒன்லைன் பணப்பரிமாற்ற நிறுவனம் ஒன்று, வாடிக்கையாளர்களின் கணக்குகளை பராமரிக்கும் சர்வர் சட்டவிரோதமாக ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தது.

அத்துடன் ஹேக்கிங் மூலமாக குறித்த சர்வரில் இருந்து 60 மில்லியன் அமெரிக்க டொலர்கள் திருடப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைவர் சாயிப் கூறுகையில், ‘இப்பணம் முற்றிலும் வேறொருவருக்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் கணக்கை முறைகேடாக எப்படி பயன்படுத்த முடிந்தது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ள கோரியுள்ளோம்.

இதில் மோனோகாயின், பிட்காயின், பிட்காயின் பணம் ஆகியவற்றையும் திருடியுள்ளனர். வாடிக்கையாளர்களின் சொத்துக்கள் பாதிக்கப்படாது என்பதற்காக நிறுவனத்தின் பெயரை நாங்கள் வெளியில் கூறவிரும்பவில்லை.

எங்களின் மிகப்பெரிய பங்குதாரரான பிஸ்கோ குழுமத்தினர் இருப்பதால், எங்களுக்கு பொருளாதார ஆதரவு இருப்பதால் தற்போதைக்கு இப்பிரச்சனையை தீர்க்க முடியும் என்று நம்புகிறோம்.

எனினும் வாடிக்கையாளர்களின் சொத்துக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக நாங்கள் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்’ என தெரிவித்துள்ளார்.

இந்த மிகப்பெரிய ஹேக்கிங் சம்பவத்தைத் தொடர்ந்து, கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers