10 லட்சம் கார்களை திரும்பப்பெறும் ஜேர்மன் நிறுவனம்! காரணம் இதுதான்

Report Print Kabilan in நிறுவனம்

ஜேர்மனி நாட்டின் பிரபல கார் நிறுவனமான B.M.W, சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான டீசல் கார்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

பிரபல ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான B.M.W, விற்பனை செய்த டீசல் கார்களின் எக்சாஸ்ட் சிஸ்டத்தில் கோளாறு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த கோளாறு தீவிரமடைந்தால் கார் தீப்பிடிக்கும் அபாயம் அதிகரிக்கும்.

சில டீசல் வாகனங்களில், எக்சாஸ்ட் கியாஸ் கூலரில் இருக்கும் கிளைக்கால் கூலிங் எனும் திரவம் லீக் ஆகிறது. இது பேராபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று B.M.W சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், B.M.W நிறுவனம் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான கார்களை திரும்பப் பெற்று, சரி செய்து கொடுப்பதாக அறிவித்துள்ளது. இதற்காக வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு வாகனங்களை திரும்பப் பெற உள்ளதாக அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளில், சுமார் 4,80,000 வாகனங்கள் இதேபோல் திரும்பப் பெறப்பட்டன. மேலும், தென்கொரியாவில் ஏற்கனவே 30 கார்கள் எரிந்து போனதற்கு B.M.W மன்னிப்பு கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்