பயனர்களின் தகவல்களை பாதுகாக்க தவறிய பேஸ்புக் நிறுவனத்திற்கு அபராதம் விதிப்பு

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

சில மாதங்களுக்கு முன்னர் இணைய உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த விடயமாக கேம்பிரிஜ் அனாலிட்டிக்கா நிறுவனத்தின் தகவல் திரட்டு ஆகும்.

இந்த நிறுவனம் பேஸ்புக் பாவனையாளர்கள் பலரின் தகவல்களை அவர்களின் அனுமதியின்றி திரட்டியிருந்தது.

இதற்கு பேஸ்புக் நிறுவனமும் உடந்தையாக இருந்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது பிரித்தானியாவின் Information Commissioner's Office (ICO) ஆனது பேஸ்புக் நிறுவனத்திற்கு அபராதம் விதித்துள்ளது.

இந்த அபராத தொகையானது 645,000 அமெரிக்க டொலர்களாகக் காணப்படுகின்றது.

பிரித்தானியாவைச் சேர்ந்த சுமார் 1 மில்லியன் பயனர்களின் தகவல்களை திரட்டியதற்காகவே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஏனைய நாடுகளும் பேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராக அந்த நாட்டு தகவல் சட்டங்களின் அடிப்படையில் அபராதம் விதிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers