5G தொழில்நுட்பம் தொடர்பில் ஹுவாவி நிறுவனம் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

ஐந்தாம் தலைமுறை மொபைல் வலையமைப்பு தொழில்நுட்பத்தினை உலகளாவிய ரீதியில் உள்ள மொபைல் பாவனையாளர்கள் பெரிதும் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர்.

காரணம் தற்போது உள்ள நான்காம் தலைமுறை மொபைல் வலையமைப்பினை விடவும் வேகம் கூடியதாக இருக்கின்றமையாகும்.

இப்படியிருக்கையில் இத் தொழில்நுட்பம் தொடர்பான மலைக்க வைக்கும் எதிர்வுகூறல் ஒன்றினை சீனாவின் மொபைல் உற்பத்தி நிறுவனமான ஹுவாவி வெளியிட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் 2025 ஆம் ஆண்டளவில் 5G தொழில்நுட்பத்தினை உலக அளவில் சுமார் 2.8 பில்லியன் மக்கள் பயன்படுத்துவார்கள் என தெரிவித்துள்ளது.

இந்த எண்ணிக்கையானது உலகெங்கிலும் மொபைல் சாதனங்களை பயன்படுத்துபவர்களின் மொத்த எண்ணிக்கையில் 58 சதவீதமாகும்.

குறித்த நவீன தொழில்நுட்பம் பெருமளவில் எதிர்பார்க்கப்படும் அதேவேளையில் இதனால் ஏற்படும் தீங்கு தொடர்பிலும் மக்கள் அவதானம் செலுத்தி வருகின்றனர்.

மொபைல் நெட்வெர்க் காரணமாக உயிரினங்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படுகின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் 5G தொழில்நுட்பம் இதன் தாக்கத்தை மேலும் அதிகரிக்கும் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers