மிகப்பிரம்மாண்டமான வளாகத்தை ஹைதராபாத்தில் திறந்து வைத்தது அமேஷான்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

உலகின் முன்னணி மின் வணிக நிறுவனங்களுள் ஒன்றான அமேஷான் இந்தியாவில் மிகப் பிரம்மாண்டமான வளாகம் ஒன்றினை திறந்து வைத்துள்ளது.

ஹைதராபாத்தில் அமைந்துள்ள இந்த வளாகமானது 9.5 ஏக்கரில் 1.8 மில்லியன் சதுர அடி பரப்பளவைக் கொண்டதாக காணப்படுகின்றது.

இங்கு 15,000 இற்கும் அதிகமான பணியாளர்கள் பணிபுரியவுள்ளனர்.

இந்தியாவில் மாத்திரம் மூன்றில் ஒரு பங்கு பணியாளர்களைக் கொண்ட அமேஷான் நிறுவனம் தற்போது குறித்த புதிய வளாகத்தில் 4,500 பணியாளர்களை பணியில் இணைத்துள்ளது.

இதற்கு முன்னர் சீட்டிலில் (Seattle) அமைந்துள்ள அமேஷானின் வளாகத்திலேயே அதிகபட்ச பணியாளர்கள் (5,000) பணியாற்றி வந்தனர்.

இப்படியிருக்கையில் தற்போது இந்தியாவின் ஹைதராபாத் வளாகம் முன்னிலை பெறவுள்ளது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்