தனது முடிவை மாற்றியது ZTE நிறுவனம்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

தொலைத்தொடர்பாடல் சாதன உற்பத்தியில் முன்னணி வகிக்கும் நிறுவனங்களில் ஒன்றாக ZTE விளங்குகின்றது.

இந்நிறுவனம் அண்மையில் அதிரடி அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருந்தது.

அதாவது பார்ஸிலோனாவில் இடம்பெறவுள்ள Mobile World Congress நிகழ்வில் கலந்துகொள்ளப்போவதில்லை என தெரிவித்திருந்தது.

இதற்கு கொரோனா வைரஸ் தாக்கத்தினை காரணமாக தெரிவித்தும் இருந்தது.

எனினும் பல நிறுவனங்களுக்கு இடையில் 5G தொழில்நுட்ப சாதனங்களை அறிமுகம் செய்வதில் போட்டி நிலவி வருகின்றமையால் தனது முடிவை திடீரென மாற்றியுள்ளது.

இதன்படி திட்டமிட்டது போன்று Mobile World Congress நிகழ்வில் கலந்துகொள்ளப்போவதாக தெரிவித்துள்ளது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்