குஷால் மெண்டிஸ், டிக்வெல்ல அரைசதம்: இங்கிலாந்தில் அசத்தும் இலங்கை அணி

Report Print Jubilee Jubilee in கிரிக்கெட்
குஷால் மெண்டிஸ், டிக்வெல்ல அரைசதம்: இங்கிலாந்தில் அசத்தும் இலங்கை அணி

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி தற்போது உள்ளூர் அணியான எசெக்ஸ் அணியுடன் பயிற்சிப் போட்டியில் ஆடி வருகிறது.

3 நாட்களை கொண்ட இந்த பயிற்சிப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

தொடக்க வீரர்களான கருணாரத்னே (8), கெளஷால் சில்வா (0) சொதப்பினாலும், அடுத்து வந்த குஷால் மெண்டிஸ் (66) அரைசதம் அடித்து அசத்தினார்.

அதேபோல் சந்திமால் (27), அணித்தலைவர் மேத்யூஸ் (30) ஓரளவு நிதானமாக ஆடி ஆறுதல் அளித்தனர். மேலும், 8வது இடத்தில் களமிறங்கிய டிக்வெல்ல (53) தன் பங்கிற்கு அரைசதம் அடித்தார்.

இதனால் முதல் இன்னிங்ஸில் அந்த அணி 63 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 254 ஓட்டங்கள் குவித்தது.

எசெக்ஸ் அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய ஆரோன் பியர்ட் 4 விக்கெட்டுகளையும், தாமஸ் மோர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய எசெக்ஸ் அணி முதல் இன்னிங்சில் நேற்றைய ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுக்கு 81 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments