டோனியை மிஞ்சிய ரகானே மனைவி: கடைசி ஓவரில் எல்லாரின் பார்வையும் இவர் மீது தான்

Report Print Santhan in கிரிக்கெட்

பத்தாவது ஐபிஎல் தொடரின் 44-வது லீக் ஆட்டத்தின் ஹைதராபாத அணிக்கு எதிரான கடைசி ஓவரின் போது டோனியை விட ரகானேவின் மனைவி பதற்றமடைந்து அதன் பின் தன் அருகே இருந்த தோழியை கட்டிப்பிடித்தது தொடர்பான புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்தியாவில் நடைபெற்று வரும் பத்தாவது ஐபிஎல் தொடர் தற்போது பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.

இந்த முறையும் புனே அணி வெளியேறிவிடும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் டோனியின் அதிரடி மற்றும் ஆல் ரவுண்டர் ஸ்டோக்சின் பார்ம் ஆகியவை புனே அணியை புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

இந்நிலையில் ஹைதரபாத் அணிக்கு எதிரான போட்டியின் போது அந்தணிக்கு கடை ஓவரில் 13 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

புனே அணி சார்பில் கடைசி ஓவரை உடன்கட் வீசினார். இந்த ஓவரின் ஒவ்வொரு பந்தின் இடைவெளியிலும் டோனி அவருக்கு ஆலோசனை வழங்கினார். இதனால் ரசிகர்கள் அனைவரும் டோனி கவனித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது கேமரா ரசிகர்கள் பக்கம் சென்ற போது, ரகானேவின் மனைவி டோனியை விட பதற்றத்துடன் ஆட்டத்தை கவனித்தார். அப்போது அவர் செய்த ரியாக்சன் அனைத்தும் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இப்போட்டியில் புனே அணி 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments