இந்தியாவில் கடைசி இரவு... வருத்தத்துடன் பை-பை சொன்ன ஸ்டீவ் ஸ்மித்

Report Print Basu in கிரிக்கெட்

இந்தியாவிற்கு நான்கு மாதங்களுக்கு முன் வந்த அவுஸ்திரேலியா அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித், தற்போது அனைத்து தொடர்களும் முடிந்து நாடு திரும்பவுள்ள நிலையில் இந்திய ரசிகர்களுக்கு வருத்தத்துடன் பை-பை கூறியுள்ளார்.

இதுகுறித்து ஸ்மித் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த நான்கு மாதங்களாக இந்தியாவில் இருந்தது அற்புதமாக அமைந்தது.

இதன் போது பல ஏற்ற தாழ்வுகள் இருந்தாலும் பல நல்ல விடயங்களை நான் கற்றுக்கொண்டேன். டெஸ்ட் தொடர் கடினமாக இருந்தாலும் அதில் விளையாடியது மகிழ்ச்சி.

இந்த சுற்றுப்பயணத்தின் போது பல சிறந்த மனிதர்கனை நான் சந்தித்தேன், புதிய நண்பர்கள் கிடைத்துள்ளனர். ஐபிஎல் தொடரில் புனே அணிக்காக வினையாடியது சிறந்த அனுபவமாக அமைந்தது.

ஐபிஎல் இறுதிப்போட்டியுடன் இந்தியாவில் கடைசி இரவை கழிக்கவுள்ளேன். இந்த சுற்றப்பயணத்தை மறக்க முடியாத பயணமாக மாற்ற உதவிய அனைத்து இந்தியர்களுக்கும் நன்றி என வருத்தத்துடன் பை-பை தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments