முடிந்தது தடைக்காலம்! திரும்பும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி: உற்சாகத்தில் ரசிகர்கள்

Report Print Raju Raju in கிரிக்கெட்

10வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் நிறைவடைந்துள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தடைக்காலம் முடிவுக்கு வந்துள்ளது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஐ.பி.எல் தொடரின் பத்தாவது சீசன் நேற்று முடிந்தது. இதன் இறுதி போட்டியில் புனே அணியை வென்று மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றியது.

இந்நிலையில் டோனி இடம் பெற்றிருந்த புனே அணி தோல்வியடைந்தாலும் அதை பெரிதாக எடுத்து கொள்ளாத அவரின் ரசிகர்கள் வேறு விதமாக கொண்டாடி வருகிறார்கள்.

இதற்கு காரணம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தடைக்காலம் முடிந்து அடுத்த ஐ.பி.எல் தொடரில் அந்த அணி களமிறங்க போவது தான்.

டோனி தலைமையில் 11வது ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்த ஆண்டு பங்கேற்க போவது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

இதையடுத்து, சென்னை அணியை மீண்டும் வரவேற்கும் விதத்தில் டுவிட்டரில் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு விசில் போடு, எங்க தல தோனிக்கு பெரிய விசிலு அடிங்க என எழுதி #ManyHappyReturnsofCSK என்ற ஹேஷ்டாக்கை ரசிகர்கள் டிரண்ட் செய்து வருகிறார்கள்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments