ஐபிஎல் இறுதிப் போட்டியில் மேட்ச் பிக்சிங்.. இணையத்தில் வெளியான வீடியோ ஆதாரம்

Report Print Basu in கிரிக்கெட்

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் மும்பை 1 ஓட்டம் வித்தியாசத்தில் புனேவை தோற்கடித்தது.

இதில் சூதாட்டம் நடந்திருக்குமா என ரசிகர்கள் சந்தேகப்பட்ட நிலையில், உறுதிப்படுத்தும் விதமாக இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.

130 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய புனே அணி 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் இழந்து நிதானமாக விளையாடிக்கொண்டிருந்தது.

துடுப்பாட்ட வீரர்கள் ஸ்மித், மனோஜ் திவாரி ஆகியோர் களத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

இதன்போது, திடீரென மும்பை அணி வீரர்கள் ரோஹித் சர்மா, பொல்லார்டு உள்ளிட்ட ஐந்து பேர் கூடி பேசுகின்றனர்.

பேசி விட்டு கலைந்து போகும் போது பொல்லார்டு, திவாரிக்கு அருகே வந்து ஷூ சரிசெய்வது போல் பேசிவிட்டு செல்கிறார்.

அந்த விநாடி முதல் சரிய தொடங்கிய புனே அணி 1 ஓட்டம் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.

பொல்லார்டு, திவாரி என்ன பேசினார்கள் என்பது மர்மமாக உள்ள நிலையில் ரசிகர்கள் பலர் இதன்போது தான் மேட்ச் பிக்சிங் நடந்ததாக குற்றம்சாட்டி வருகின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments