இலங்கை வீரர் 36 சிகரெட்.. கோஹ்லி 31 சிகரெட்! வெளியான அதிர்ச்சி தகவல்

Report Print Santhan in கிரிக்கெட்

டெல்லியில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் காற்று மாசுபாடின் காரணமாக இந்தியா மற்றும் இலங்கை வீரர்கள் 30 சிகரெட் பிடித்த அளவிற்கு காற்று மாசை சுவாசித்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் இரு அணிகளுக்கிடையே நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் நடைபெற்று வருவதால், இப்போட்டியின் போது இலங்கை வீரர்கள் காற்று மாசுபாடின் காரணமாக போட்டியை இடையின் நிறுத்தும் படி கூறி பிரச்சனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் போட்டியின் போது, வீரர்கள் சுவாசித்த காற்றின் மாசு அளவு 30 சிகரெட்டிற்கும் மேலாக சுவாசித்தாக கூறப்படுகிறது.

அதாவது இரண்டாவது நாள் ஆட்டத்தின் போது, இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி மொத்தமாக, சராசரியாக 10 கி.மீற்றர் வேகத்தில் ஓட்டம் எடுக்க 5,786 அடி ஓடியுள்ளார். அதில் தனக்காக 143 ஓட்டங்களும், தனது பாட்னருக்காக 120 ஓட்டங்களும் அடங்கும்.

இந்த நேரத்தில் இவர் சுமார் நாள் ஒன்றுக்கு 31 சிகரெட்டுகளை புகைத்த அளவு காற்றுமாசை தன்னுள் சுவாசித்துள்ளதாக டெல்லியின் காற்றுமாசு அளவு அறிக்கை தெரிவித்துள்ளது.

இதே போன்று இலங்கை அணியின் பந்து வீச்சாளர் லக்மல் 15 ஓவர்கள் வீச சராசரியாக 8 கி.மீற்றர் வேகத்தில் சுமார் 2,700 அடி ஓடியுள்ளார். இது நாள் ஒன்றுக்கு 36 சிகரெட்களை பிடித்த அளவாகும். அதேபோல களத்தில் இருக்கும் பீல்டர்கள் 5 கி.,மீற்றர் வேகத்தில் ஓடி பந்தை தடுப்பதால், நாள் ஒன்றுக்கு 27 சிகரெட் பிடித்த அளவு காற்றுமாசை சுவாசித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்