ஐபிஎல்-ல் கொல்கத்தா அணி தலைவராக தினேஷ் கார்த்திக் நியமனம்

Report Print Athavan in கிரிக்கெட்
272Shares

2018 ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் தலைவராக தினேஷ் கார்த்திக் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

அடுத்த மாதம் ஐ.பி.எல் போட்டிகள் தொடங்குகின்றன அதில் கடந்த முறை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணித் தலைவராக இருந்து வழிநடத்திய கௌதம் காம்பிர் இந்த முறை டெல்லி அணியால் ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளார்.

எனவே கொல்கத்தா அணியின் தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு பரவலாக இருந்தது. அணித்தலைவர் போட்டியில் உத்தப்பா மற்றும் கார்த்திக் ஆகிய இருவரும் முன்னணியில் இருந்தனர்.

இந்நிலையில் தினேஷ் கார்த்திக்கை அணித்தலைவராக கொல்கத்தா நைட்ரைடர்ஸ் நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.

தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் இந்த வருடம் தான் முதன் முதலாக கொல்கொத்தா அணியின் சார்பாக விளையாட இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்