புகழ்பெற்ற மைதானத்தை கைவிடும் நியூசிலாந்து: காரணம் என்ன?

Report Print Kabilan in கிரிக்கெட்

நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் புகழ்பெற்ற மைதானமான ஈடன் பார்க்கை கைவிட்டு, புதிய கிரிக்கெட் மைதானத்தை தயார் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நியூசிலாந்தில் உள்ள மைதானங்களில் மிக முக்கியமான கிரிக்கெட் மைதானம் ஆக்லாந்து ஈடன் பார்க். கடந்த 1930ஆம் ஆண்டில் இருந்து இந்த மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த மைதானத்தில், சுமார் 41 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து போட்டியை கண்டு களிக்க முடியும். ஆனால், தற்போது டெஸ்ட் போட்டிகளுக்கு ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

இதனால், நியூசிலாந்து அணி அதிக செலவை சந்திக்க வேண்டியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பாதுகாப்பு, மைதான பராமரிப்பு ஆகியவற்றிற்கு செலவழிக்கும் பணத்தை திரும்ப எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, நிதிச்சுமையை சரிசெய்ய மிகப்பெரிய மைதானமான ஆக்லாந்து ஈடன் பார்க் மைதானத்தை, வெஸ்டர்ன் ஸ்பிர்ங்ஸ் Stadium-க்கு மாற்ற நியூசிலாந்து முடிவு செய்துள்ளது.

ஈடன் பார்க் மைதானத்தில் கடந்த 2006ஆம் ஆண்டில் இருந்து 3 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Reuters
Getty Images

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்