சதம் மற்றும் டக்அவுட்: வித்தியாசமான சாதனையில் இணைந்த சென்னை வீரர்

Report Print Kabilan in கிரிக்கெட்

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் அம்பத்தி ராயுடு, ஒரே அணிக்கு எதிராக சதம் மற்றும் டக்-அவுட் ஆகி சாதனை பட்டியலில் இணைந்துள்ளார்.

ஐ.பி.எல் 2018 தொடரின் குவாலிபையர்-1 ஆட்டம் நேற்று வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் சென்னை அணிகள் மோதின.

முதலில் துடுப்பாட்டம் செய்த ஐதராபாத் அணி 139 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் ஆடிய சென்னை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 140 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் சென்னை அணி வீரர் அம்பத்தி ராயுடு, தான் சந்தித்த முதல் பந்திலேயே Clean-Bold ஆனார். இதன்மூலம் ஒரே அணிக்கு எதிராக ஒரு சீசனில் சதம் அடித்தும், டக்-அவுட் ஆகியும் சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன்பு, கடந்த 2009ஆம் ஆண்டில் டிவில்லியர்ஸ் சென்னை அணிக்கு எதிராகவும், 2010ஆம் ஆண்டில் டேவிட் வார்னர் கொல்கத்தா அணிக்கு எதிராகவும், 2011ஆம் ஆண்டில் பஞ்சாப் அணிக்கு எதிராகவும், கில்கிறிஸ்ட் பெங்களூரு அணிக்கு எதிராகவும், 2012ஆம் ஆண்டில் முரளி விஜய் டெல்லி அணிக்கு எதிராகவும், 2016ஆம் ஆண்டில் கோஹ்லி குஜராத் அணிக்கு எதிராகவும் இந்த சாதனையை படைத்துள்ளனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers