42 நாட்களில் 5 டெஸ்ட் என்பது கேலியானது: நட்சத்திர வீரர் ஆண்டர்சன்

Report Print Kabilan in கிரிக்கெட்
199Shares
199Shares
lankasrimarket.com

இந்தியாவிற்கு எதிராக 42 நாட்களில் 5 டெஸ்டில் விளையாடும் வகையிலான அட்டவணை தயாரிப்பு கேலிக் கூத்தானது என, இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வகை தொடரிலும் விளையாட உள்ளது.

ஜூலை 3ஆம் திகதி டி20 தொடரும், 12ஆம் திகதி ஒருநாள் தொடரும், ஆகஸ்ட் 1ஆம் திகதி டெஸ்ட் தொடரும் தொடங்க உள்ளது.

டெஸ்ட் தொடரை பொறுத்தவரை, முதல் டெஸ்ட் ஆகஸ்ட் 1ஆம் திகதியும், 2வது டெஸ்ட் ஆகஸ்ட் 9ஆம் திகதியும், 3வது டெஸ்ட் ஆகஸ்ட் 18ஆம் திகதியும், 4வது டெஸ்ட் 30ஆம் திகதியும், 5வது மற்றும் கடைசி டெஸ்ட் செப்டம்பர் 9ஆம் திகதியும் தொடங்க உள்ளது.

இந்த 5 டெஸ்ட் போட்டிகளும் 42 நாட்களில் நடைபெறுமாறு இடைவெளி இல்லாமல் அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தொடர் முழுவதும், முழு உடல் தகுதியுடன் நட்சத்திர வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் விளையாட வேண்டும் என, அவருக்கு 6 வாரங்கள் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் அவர் கவுண்ட்டி போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த அட்டவணை குறித்து ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறுகையில்,

‘கடந்த இரண்டு ஆண்டுகளாக என்னுடைய தோள்பட்டையில் காயம் பிரச்சனை இருந்து வருகிறது. என்னால் சிறந்த வழியில் அதை பார்த்துக் கொள்ள முடியும். நான் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று தோள்பட்டையை வலுவாக்குவது அவசியம்.

42 நாட்களுக்குள் ஐந்து டெஸ்ட் என்பது கேலிக்கூத்தானது. இது ஏராளமான வகையில் மன அழுத்தத்தை கொடுக்கும். இந்த அட்டவணையால் நான் லன்காஷைர் அணிக்கான சில போட்டிகளை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்காக இதுவரை 138 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜேம்ஸ் ஆண்டர்சன் 540 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்