இங்கிலாந்து மண்ணில் கோஹ்லி படை கண்டிப்பாக வெற்றி பெறும்: தென் ஆப்பிரிக்கா முன்னாள் வீரர் சொன்ன காரணம்

Report Print Santhan in கிரிக்கெட்

கோஹ்லி தலைமையிலான இந்திய அணி எதை வேண்டும் என்றாலும் செய்து முடிக்கும் திறமை உடையதால், இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி நிச்சயம் வெல்லும் என்று கூறியுள்ளார்.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணி அங்கு டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் டி20 தொடரை இந்திய அணியும், ஒருநாள் போட்டிக்கான தொடரை இங்கிலாந்து அணியும் கைப்பற்றியுள்ளதால், அடுத்தமாதம் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரை எந்த அணி கைப்பற்றும் என்று எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்டைன், கோஹ்லி தலைமையிலான இந்திய அணியின் செயல்பாட்டை நன்றாக புரிந்து கொண்டேன்.

அவர் தலைமையிலான இந்திய அணி என்ன வேண்டுமானாலும், எவ்வளவு கடினமான தொடரையும் வென்று முடிக்கும் என்பதை தெரிந்து கொண்டேன்.

சமீபகாலமாக இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரில் சொதப்பி வருகிறது. பாகிஸ்தானுக்கு எதிராக 1-1 என டிரா செய்தது, நியூசிலாந்திடம் 1-0 என தோல்வியடைந்தது. ஆஷஸ் தொடரில் 4-0 என தோல்வியடைந்தது.

ஆனால் அதே சமயம் இந்திய அணி பக்கம் பார்க்கையில், அந்தணியில் சிறப்பான சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். அவர்களை சமாளிப்பது மிகவும் கடினம், இது இங்கிலாந்து அணிக்கும் கடினமாக இருக்கும் என்பதால், நிச்சயமாக டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றும் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்