ரோகித் சர்மாவின் டெஸ்ட் கனவு இனி அவ்வளவு தானா? மீண்டும் புறக்கணிக்கப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி

Report Print Santhan in கிரிக்கெட்
300Shares

இந்திய அணியின் துவக்க வீரரான ரோகித் சர்மா அவுஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான இந்திய ஏ அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்டுள்ளதால், அவரின் டெஸ்ட் கனவு இனி அவ்வளவு தானா என்ற கேள்வி எழுந்துள்ளது.

துவக்க வீரரான ரோகித் சர்மா ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், அவரால் இந்திய அணிக்கான டெஸ்ட் அணியில் இடம் பெற முடியவில்லை.

ரோகித் கடந்த ஒரு வருடமாக டெஸ்ட் போட்டியில் இடம்பெற முடியாமல் தவித்து வருகிறார். ரோஹித் சர்மாவிற்கு இந்திய அணியில் இடம் கொடுக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் தொடர்ந்து வைத்து வரும் கோரிக்கை வைத்து வந்தாலும் ஒவ்வொரு தொடரிலும் அவர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே கிடைத்து வருகிறது.

அதுமட்டுமின்றி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது மற்றும் 5-வது டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் ஹனுமா விஹாரி, ப்ரிதீவ் ஷா போன்ற இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலாவது வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரோகித் புறக்கணிக்கப்பட்டார்.

இந்நிலையில் ரோஹித் சர்மா மற்றும் அவரது ரசிகர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி செய்தியாக, அவுஸ்திரேலியா ஏ அணியுடனான போட்டிக்கான இந்திய ஏ அணியில் இருந்தும் ரோஹித் சர்மா புறக்கணிப்பட்டுள்ளார்.

முதல் தர டெஸ்ட் போட்டிகளில் கூட ரோஹித் சர்மாவை புறக்கணிக்கும் வேலையை பி.சி.சி.ஐ. துவங்கிவிட்டதால் ரோஹித் சர்மா இனி டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதில் சந்தேகம் எழுந்துள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்