கிரிக்கெட் கடவுளை சிறப்பாக கௌரவித்த கூகுள்!

Report Print Kabilan in கிரிக்கெட்

கிரிக்கெட் கடவுள் என்று அழைக்கப்படும் அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் டான் பிராட்மேனின் 110வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக, டூடுல்-ஐ வெளியிட்டு கூகுள் சிறப்பித்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் முன்னாள் ஜாம்பவான் டான் பிராட்மேன். கிரிக்கெட்டில் பல அரிய சாதனைகளை படைத்ததால், இவர் கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படுகிறார்.

பிராட்மேன் கடந்த 1930ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில், முதல் டெஸ்டில் 131 ஓட்டங்களும், இரண்டாவது டெஸ்டில் 254 ஓட்டங்களும் குவித்து அசத்தினார்.

மூன்றாவது டெஸ்டில் விஸ்வரூபமெடுத்த அவர், ஒரே நாளில் 309 ஓட்டங்கள் குவித்து வரலாற்று சாதனை படைத்தார். 52 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய பிராட்மேன், 6,996 ஓட்டங்கள் குவித்துள்ளார்.

Reuters

அவரது துடுப்பாட்ட சராசரி 99.96 ஆகும். இந்த அளவுக்கு சராசரியை எவராலும் நினைத்துக் கூட பார்க்க முடியாது. கிரிக்கெட்டில் 961 புள்ளிகள் பெற்ற முதல் வீரர் இவர் தான். இவர் 29 சதங்கள், 13 அரைசதங்கள் அடித்துள்ளார்.

இந்நிலையில், இன்று டான் பிராட்மேனின் 110வது பிறந்த நாள் ஆகும். எனவே அவரது சாதனைகளை கௌரவிக்கும் விதமாக, பிராட்மேன் பந்தை விளாசுவது போன்ற சிறப்பு டூடுல்-ஐ வெளியிட்டுள்ளது கூகுள்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்