நேற்றிரவே நாங்கள் இதை நினைத்தோம்! இங்கிலாந்து தோல்விக்கு பின் பேசிய விராட் கோஹ்லி

Report Print Santhan in கிரிக்கெட்
377Shares
377Shares
ibctamil.com

இங்கிலாந்து அணி அபாரமாக விளையாடியது, இதன் காரணமாகவே அவர்களால் சவாலான இலக்கை நிர்ணயிக்க முடிந்தது என்று இந்திய அணியின் தலைவர் கோஹ்லி கூறியுள்ளார்.

சவுத்தாம்டனில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்து தொடரை இழந்தது.

245 ஓட்டங்களை இந்திய அணி அசால்ட்டாக எட்டிவிடும் என்று எதிர்பார்த்த போது, கோஹ்லி, ராஹானேவைத் தவிர மற்ற வீரர்கள் சொதப்ப இந்திய அணி 184 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட் ஆனது.

இந்நிலையில் தோல்விக்கு பின் பேசிய கோஹ்லி, இங்கிலாந்து அணி அபாரமாக விளையாடியது. குறிப்பாக இரண்டாவது இன்னிங்ஸில் அவர்கள் சிறப்பாக விளையாடினார்.

அதன் காரணமாகவே அவர்களால் இந்த இலக்கை நிர்ணயிக்க முடிந்தது.

245 ஓட்டங்கள் இலக்கு என்பது சவாலானது தான். இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற 50 சதவீதம் வாய்ப்பும், தோல்வியடைய 50 சதவீதம் வாய்ப்பும் உள்ளதாக நேற்று இரவே நினைத்தோம்.

இங்கிலாந்து அணி எங்களுக்கு கடும் நெருக்கடியை கொடுத்தது. ரஹானேவும் நானும் சிறப்பாக விளையாடினோம்.

ஆனால் அடுத்தடுத்து வந்த வீரர்கள் அதனை செய்ய தவறவிட்டனர். முதல் இன்னிங்ஸில் புஜாராவின் ஆட்டம் தனித்துவமானது.

இந்த தோல்வியில் இருந்த பாடம் கற்றுக் கொண்டு அடுத்து வரும் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்