கோஹ்லி இல்லாதது சாதகம்! இந்திய அணியின் 10 விக்கெட்டையும் நான் வீழ்த்துவேன் என பாகிஸ்தான் வீரர் உறுதி

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணியின் பத்து விக்கெட்டுகளையும் நான் வீழ்த்துவேன் என்று பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஹசன் அலி கூறியுள்ளார்.

இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் பங்கு பெறும், ஆசிய அணிக்கான தொடர் வரும் 15-ஆம் திகதி துவங்கவுள்ளது.

இதற்கான இந்திய அணியில் கோஹ்லிக்கு ஓய்வுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. கோஹ்லிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால், அது எங்களுக்குத் தான் சாதகம் என்று பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், கோஹ்லி இல்லாததால் இந்தியாவின் 10 விக்கெட்டுகளை நான் வீழ்த்துவேன். ஒரு பந்து வீச்சாளர்

5 விக்கெட்டுகளை வீழ்த்துவதே கடினமான சூழலில், ஹசன் அலி இந்தியாவுக்கு எதிராக 10 விக்கெட்டுகளை வீழ்த்துவேன் என தெரிவித்திருப்பது வேடிக்கையாக உள்ளது.

மேலும் இலங்கையின் சாமிந்தா வாஸ் 10 ஓவர் வீசி 8 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers