பாகிஸ்தான் வீரரின் ஷூ லேசை கட்டிவிட்ட இந்திய வீரர் சாஹல்: நெகிழ்ந்த ரசிகர்கள்

Report Print Kabilan in கிரிக்கெட்

பாகிஸ்தான் அணியுடனான போட்டியின் போது, இந்திய வீரர் சாஹல் எதிரணி வீரர் உஸ்மான் கானின் ஷூ லேசை கட்டிவிட்ட சம்பவம் இருநாட்டு ரசிகர்களையும் நெகிழ்ச்சியடைய செய்தது.

இந்தியா-பாகிஸ்தான் மோதிக்கொள்ளும் போட்டி என்றாலே இருநாட்டு ரசிகர்களும் சமூக வலைதளங்கள் உட்பட கடுமையாக மோதிக் கொள்வார்கள்.

இந்நிலையில், இருநாட்டு ரசிகர்களும் நெகிழ்ச்சியடையும் சம்பவம் ஒன்று ஆசிய கிண்ண தொடரின் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டியின் போது நிகழ்ந்தது.

பாகிஸ்தான் அணி வீரர் உஸ்மான் கானின் ஷூ லேஸ் அவிழ்ந்த நிலையில், இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுவேந்திர சாஹல் அதனை கட்டிவிட்டார். இது மைதானத்தில் இருந்த அனைத்து ரசிகர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியதுடன், நெகிழ்ச்சியடையவும் செய்தது.

இந்நிலையில், இந்த புகைப்படம் சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலர் சமூக ஊடகங்களில் நெகிழ்ச்சியுடன் இதனை பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers