சச்சினின் சாதனையை முறியடித்த விராட் கோஹ்லி! எதில் தெரியுமா?

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி 123 இன்னிங்சில் 24 சதங்கள் அடித்து, சச்சின் டெண்டுல்கரை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. முதலில் துடுப்பாட்டம் செய்த இந்திய அணி, 149.5 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 649 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

இந்திய அணி தரப்பில் பிரித்வி ஷா 134 ஓட்டங்களும், விராட் கோஹ்லி 139 ஓட்டங்களும், ஜடேஜா ஆட்டமிழக்காமல் 100 ஓட்டங்களும் விளாசினர்.

கோஹ்லிக்கு இது 24வது டெஸ்ட் சதம் ஆகும். இதன்மூலம் குறைந்த இன்னிங்சில் அதிக சதம் விளாசியவர்கள் பட்டியலில் கோஹ்லி 2வது இடத்தைப் பிடித்துள்ளார்.

அத்துடன் இரண்டாவது இடத்தில் இருந்த சச்சினை டெண்டுல்கரை அவர் பின்னுக்கு தள்ளியுள்ளார். 72 டெஸ்ட்களில் 123 இன்னிங்சில் கோஹ்லி 24 சதங்களை அடித்துள்ளார்.

சச்சின் 125 இன்னிங்சில் 24 சதங்கள் அடித்திருப்பதால் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

இந்தப் பட்டியலில் டான் பிராட்மேன் 66 இன்னிங்சில் 24 சதங்கள் அடித்து முதல் இடம் வகிக்கிறார். கவாஸ்கர் (128 இன்னிங்ஸ்) 4வது இடத்திலும், மேத்யூ ஹைடன் (132 இன்னிங்ஸ்) 5வது இடத்திலும் உள்ளனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்