கேப்டன் பொறுப்பிலும் சாதனை படைத்த ரோஹித் ஷர்மா

Report Print Kabilan in கிரிக்கெட்

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், இந்திய அணித்தலைவர் ரோஹித் ஷர்மா புதிய சாதனை படைத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி நேற்றைய டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியதன் மூலம், மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது.

இதற்கு முன்பு கடந்த ஆண்டு டிசம்பரில், இலங்கைக்கு எதிரான டி20 தொடரையும் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இதன்மூலம், டி20 போட்டிகளில் இரண்டு முறை ஒயிட்வாஷ் செய்த இந்திய அணித்தலைவர் என்ற சாதனையை ரோஹித் ஷர்மா படைத்துள்ளார். மேலும், அவரது தலைமையில் 11 ஆட்டத்தில் விளையாடியுள்ள இந்திய அணி, 10 வெற்றிகளைப் பெற்று ஒரு தோல்வியை மட்டுமே அடைந்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் மைக்கேல் கிளார்க், சோயிப் மாலிக் ஆகியோரின் சாதனையையும் இதன்மூலம் ரோஹித் முறியடித்துள்ளார். அத்துடன் நேற்றைய போட்டியில் ரோஹித் ஷர்மா அடித்த பவுண்டரி டி20யில் அவரது 200வது பவுண்டரியாகும்.

இதனால் டி20யில் 200 பவுண்டரிகள் விளாசிய 2வது இந்திய வீரர் என்ற பெருமையையும் ரோஹித் பெற்றுள்ளார். கோஹ்லி 214 பவுண்டரிகள் அடித்து முதல் இடத்தில் உள்ளார். சர்வதேச அளவில் இலங்கை வீரர் தில்சன் 223 பவுண்டரிகள் அடித்து முதலிடத்தில் உள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்