71 ஆண்டுகள் வரலாற்றை மாற்றி எழுதிய இந்திய அணி வீரர்கள்: அடித்த ஜாக்பாட்

Report Print Deepthi Deepthi in கிரிக்கெட்

சிட்னியில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் அவுஸ்திரேலியாவை 2 - 1 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்ற இந்திய வீரர்களுக்கு பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை ஒருமுறை கூட இந்திய அணி அவுஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றதில்லை.

சுமார் 71 ஆண்டுகள் வரலாற்றில் முதல்முறையாக அவுஸ்திரேலியாவை, அதன் சொந்த மண்ணில் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி வீழ்த்தி வரலாற்றை மாற்றி எழுதியுள்ளது.

அவுஸ்திரேலியாவை சொந்த மண்ணில் வீழ்த்திய கேப்டன் என்ற பெருமையை விராட் கோஹ்லி பெற்றுள்ளார்.

அவுஸ்திரேலியவில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரை வென்று வரலாற்று சாதனை ‌படைத்த இந்திய அணிக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் பரிசுத் தொகை அறிவித்துள்ளது.

அதன்படி அணியின் லெவனில் இடம்பெற்ற வீரர்களுக்கு ஒவ்வொரு போட்டிக்கும் தலா ரூ.15 லட்சம் அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

லெவனில் இடம் பெறாத, அதேநேரம் அணியில் இடம்பெற்ற வீரர்களுக்கு ஒவ்வொரு போட்டிக்கும் 7.5 லட்சம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும், பயிற்சியாளர்களுக்கு தலா 25 லட்சம் அளிக்கப்படும் என வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers