உலகக்கோப்பை போட்டியில் விளையாட வாய்ப்பு கொடுங்க..கெஞ்சும் இந்திய அணியின் முக்கிய வீரர்

Report Print Santhan in கிரிக்கெட்

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை தொடரில் தனக்கு வாய்ப்பு தரும் படி இந்திய அணி வீரரான ரகானே கோரிக்கை வைத்துள்ளார்.

பல கிரிக்கெட் தொடர்களில் இந்திய அணிக்கு துணை கேப்டனாக இருந்து வந்த ரஹானே தனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இருப்பினும், இளம் வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் ரஹானேவுக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைப்பதில்லை.

இறுதியாக ரஹானே கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் தான் விளையாடி இருந்தாா்.

இந்நிலையில் இது குறித்து அவர் கூறுகையில், எனக்கு எப்போதும் அணி தான் முக்கியம். இதனால் அணி நிா்வாகம் மற்றும் தோ்வுக் குழுவின் முடிவுகளை மதிக்கிறேன். ஆனாலும், ஒருவரின் பங்களிப்புக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும்.

ஒரு வீரராக நான் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறேன். நான் பங்கேற்ற கடந்த மூன்று தொடர்களில் என்னுடைய பேட்டிங் சராசரியை பார்த்தீர்கள் என்றால் 45 முதல் 50 வரை இருக்கும்.

அணியில் இருந்து நீக்கிய பின்னரும், நான் உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறேன்.

ஒரு துடுப்பாட்ட வீரராக நான் அதிரடியாக விளையாடுபவன். ஆனால் தனிப்பட்ட முறையில் கூச்ச சுபாவம் கொண்டவன்.

என்னுடைய பேட் தான் பேசவேண்டும் என்று நினைப்பேன். ஆனால் சில தருணங்களில் உண்மையையும் பேசியாக வேண்டும். உலகக்கோப்பைத் திட்டங்களில் என் பெயா் இருப்பதாக தோ்வுக் குழுத் தலைவா் தொிவித்துள்ளாா்.

அவர் கூறியது நல்லது தான் என்றாலும், என்னுடைய திறமையை வெளிப்படுத்த அவர்கள் வாய்ப்பு தர வேண்டும், உலகக்கோப்பை அணியில் இடம் பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்