இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? இந்த மூன்று பேருக்கு தான் அதிகம்

Report Print Raju Raju in கிரிக்கெட்

ரூ. 7 கோடி சம்பளம் கிடைக்கும் A+ பிரிவிற்குள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா நுழைந்து அசத்தியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் நிர்வாக அமைப்பான பிசிசிஐ, வீரர்களை A+, A, B, C ஆகிய நான்கு பிரிவுகளாக பிரித்து அவர்களுக்கு ஆண்டுதோறும் சம்பளம் வழங்கி வருகிறது.

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான 2018-2019ம் ஆண்டுக்கான ஒப்பந்தத்தை பிசிசிஐ அறிவித்துள்ளது.

திறமை மற்றும் அவர்களின் நன்னடத்தையை அடிப்படையாகக் கொண்டு A+, A, B, C போன்ற 4 பிரிவுகளின் கீழ் இந்திய கிரிக்கெட் வீரர்கள் வகைப்படுத்தப்படும் நிலையில் A+ பிரிவில் இடம்பிடித்திருக்கும் வீரர்களுக்கு ரூ. 7 கோடியும், A பிரிவு வீரர்களுக்கு ரூ. 5 கோடியும், B பிரிவினருக்கு ரூ. 3 கோடியும், C பிரிவு வீரர்களுக்கு ரூ. 1 கோடியும் வழங்கப்படும்.

இதில் தற்போது நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா A+ பிரிவில் இடம்பிடித்துள்ளார்.

கேப்டன் விராத் கோஹ்லி மற்றும் ரோகித் ஷர்மா உள்ளிட்ட 2 நட்சத்திரங்களை மட்டும் கொண்டிருந்த A+ பிரிவில் இப்போது 3-வது வீரராக பும்ரா கால் பதித்துள்ளார்

டோனி இந்திய அணிக்கு என்ன தான் சிறந்த கேப்டனாகவும், சிறந்த மேட்ச் ஃபினிஷராகவும் இருந்தாலும் அவர் கூட A+ பிரிவிற்குள் நுழையவில்லை.

டோனி உச்சக்கட்டமாக இதுவரை A பிரிவில் மட்டுமே இடம்பிடித்துள்ளார். டோனியுடன், ரிஷாப் பண்ட், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார், சட்டீஸ்வர் புஜாரா, அஜிங்கியா ரஹானே, ஷிக்கர் தவான், முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் A பிரிவில் இடம்பிடித்துள்ளனர்.

B பிரிவில் கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, உமேஷ் யாதவ், யுஸ்வேந்திர சாஹல் இடம்பிடித்துள்ளனர்.

C பிரிவில் கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக், அம்பத்தி ராயுடு, மானீஷ் பாண்டே, ஹனுமா விஹாரி, கலீல் அகமது, விருத்திமான் சஹா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்