ரிஷப் பண்ட் மீது சற்று வருத்தம் தான்: இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகார் தவான்

Report Print Kabilan in கிரிக்கெட்

ரிஷப் பண்ட நேற்றைய ஆட்டத்தில் ஸ்டெம்பிங்கை தவறவிட்டது சற்று வருத்தம்தான் என இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகார் தவான் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக மொஹாலியில் நடந்த 4வது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. எளிதில் வெற்றி பெற வேண்டிய இந்தப் போட்டியில் தோல்வியடைந்தது இந்திய அணி மீது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

தோல்வி குறித்து அணித்தலைவர் விராட் கோஹ்லி கூறுகையில், பனிப்பொழிவில் பந்துவீசுவது மிகக் கடினமானது. அது பந்துவீச்சை மோசமாக்கியது. டர்னரின் பேட்டிங் ஆட்டத்தையே மாற்றிவிட்டது என தெரிவித்தார்.

AP

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் ஷிகார் தவான் கூறுகையில், ‘நாங்கள் பனிப்பொழிவு குறித்து இரண்டாவது முறையாக தவறாக முடிவு எடுத்துள்ளோம். ஏனென்றால், கடந்த போட்டியில் இந்திய அணி பனிப்பொழிவு வரும் என எதிர்பார்த்து 2வது பேட்டிங் செய்தோம்.

ஆனால், அங்கு பனிப்பொழிவு ஏற்படாது என நினைத்து நாணயச் சுழற்சியில் வென்று முதலில் பேட்டிங் செய்தோம். போட்டியில் தோற்றதற்கு இது ஒரு முக்கியமான காரணம்.

ரிஷப் பண்ட் நேற்றைய ஆட்டத்தில் ஸ்டெம்பிங்கை தவறவிட்டது சற்று வருத்தம் தான். ஆனால், அவர் தற்போது வளர்ந்து வரும் இளம் வீரர். அதனால் அவரை டோனியுடன் ஒப்பிடுவது தவறு’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...