தமிழக வீரர் விஜய் ஷங்கருக்கும் உலககோப்பையில் வாய்ப்பு கிடைக்குமா? சூசமாக பதில் அளித்த கோஹ்லி

Report Print Santhan in கிரிக்கெட்

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை தொடரில் ஆல் ரவுண்டர் இடத்திற்கு யார் வர வேண்டும் என்பதை கோஹ்லி முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

அவுஸ்திரேலியா அணிக்கெதிரான டி20 தொடரில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், ஒருநாள் தொடரை 3-2 என்று இழந்ததால், இந்திய அணியை முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

உலகக்கோப்பை தொடருக்காக வீரர்களை கலவையாக ஒவ்வொரு தொடரில் இறக்குவதாகவும், அப்போது தான் எந்த வீரர் உலகக்கோப்பையில் சரியாக விளையாடுவர் என்பதை அறிய முடியும் என்பதற்காக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக், ஆல்ரவுண்டர் விஜய் ஷங்கர், காயம் காரணமாக அவுஸ்திரேலியா தொடரில் விலகிய பாண்ட்யா மற்றும் ரிஷப் பாண்ட் போன்றோர் சுழற்சி முறையில் அணியில் இடம் பிடித்து வந்தனர்.

இதில் கீப்பரில் ரிசப் பாண்ட் கடைசி இரண்டு போட்டியில் சொதப்பியதால், டோனியுடன், தினேஷ் கார்த்திக் என இரண்டு விக்கெட் கீப்பர்கள் கிட்டத்தட்ட இந்திய அணி உறுதி செய்துவிட்டதாக தகவல் வெளியாகின.

இந்நிலையில் ஆல்ரவுண்டருக்கான இடத்தில் பாண்ட்யாவா? தமிழக வீரர் விஜய் சங்கரா என்பது குறித்து கோஹ்லி முடிவு செய்துவிட்டாராம்.

காயம் மற்றும் சர்ச்சை காரணமாக பாண்ட்யா அணியில் இடம் பிடிக்காத போது, விஜய்சங்கரின் ஆட்டம் கோஹ்லிக்கு பிடித்துவிட்டதால், அவரின் மீது கோஹ்லி அதிக நம்பிக்கை வைத்துள்ளார்.

இருப்பினும் அவுஸ்திரேலியா அணிக்கெதிரான கடைசி மூன்று ஒருநாள் போட்டிகளில் விஜய் சங்கர், 32, 26 மற்றும் 16 ஓட்டங்கள் எடுத்து அதிருப்தியாக்கினார்.

மூன்று போட்டிகளிலும் இந்தியா ஷங்கருக்கு பெரிய பங்களிப்பை வழங்கியது, ஆனால் அவர் தோல்வியடைந்தார்.

இதன் மூலம், பாண்ட்யா தான் இங்கிலாந்தில் ஆட சரியான மனிதர் என்று கோஹ்லி நம்பியிருப்பதாகவும், இருந்த போதிலும் காயத்திலிருந்து பாண்ட்யா மீண்டு வந்த பின் இதைப் பற்றி முடிவு செய்யப்படும் என கோஹ்லி தெரிவித்துள்ளார்.மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்