இதுவும் பந்துவீச்சாளர்களின் தவறுதான்! புகைப்படத்துடன் அஸ்வினுக்கு ஆதரவு தெரிவிக்கும் அவுஸ்திரேலிய வீரர்

Report Print Kabilan in கிரிக்கெட்

‘மன்கட்’ முறையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் பட்லரின் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தியதற்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல் தொடரின் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஜோஸ் பட்லரின் விக்கெட்டை, பஞ்சாப் அணித்தலைவர் அஸ்வின் ‘மன்கட்’ முறையில் ஆட்டமிழக்க செய்தார் .

இந்த விக்கெட் பெரும் சர்ச்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்தியது. அத்துடன் ரசிகர்கள், கிரிக்கெட் வீரர்களின் கண்டனங்களுக்கு அஸ்வின் ஆளானார். எனினும் முன்னாள் வீரர்களான கபில்தேவ், மஞ்ரேக்கர் ஆகியோர் அஸ்வினுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில், அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சனும் தற்போது அஸ்வினுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் நேற்று நடந்த கொல்கத்தா-பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஐ.பி.எல் போட்டியில், கொல்கத்தா அணி வீரர் ரஸல் பந்துவீசும்போது பஞ்சாப் துடுப்பாட்ட வீரர் முன்னதாகவே கிரீஸை தாண்டி நின்றார்.

ஆனால், அதனை கவனிக்காமல் ரஸல் பந்து வீசினார். அந்தப் புகைப்படத்தை ஜான்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அத்துடன் பதிவில், ‘இதுவும் பந்துவீச்சாளர்களின் தவறுதான்.

பந்து வீசுவதற்கு முன்னர் பந்துவீச்சாளர்களின் முன்னங்கால் எல்லைக்கோட்டின் உள் சரியாக இருக்கிறதா என்று சரி பாருங்கள்’ என தெரிவித்துள்ளார். இதற்கு முன்பாக மன்கட் முறை குறித்து ஜான்சன் கூறுகையில்,

‘மன்கட் முறையில் விக்கெட் எடுப்பது ஏமாற்றுவது அல்ல. இது விதியில் இருக்கிறது. இருப்பினும் நான் ஒருமுறை அந்த துடுப்பாட்ட வீரருக்கு எச்சரிக்கை கொடுத்திருப்பேன். துடுப்பாட்ட வீரர்களும் விதிகளை உணர்ந்து நியாயமாக விளையாட வேண்டும்’ என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...