6 விக்கெட் வீழ்த்தியது கனவு போல் உள்ளது: மலிங்காவுக்கு பதிலாக விளையாடிய மும்பை அணி வீரர்

Report Print Kabilan in கிரிக்கெட்

ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியது கனவு போல் உள்ளது என மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அல்ஜாரி ஜோசப் தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல் தொடரின் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

மும்பை அணியில் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் அல்ஜாரி ஜோசப் 12 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன்மூலம் 11 ஆண்டுகால சாதனையையும் முறியடித்தார்.

மலிங்கா தனது நாட்டிற்கு திரும்பியதால் அணியில் இடம்பிடித்த ஜோசப்(22), தன்னுடைய அறிமுக போட்டியிலேயே அனைவரையும் பிரம்மிக்க வைத்துள்ளார். இந்நிலையில், 6 விக்கெட்டுகள் வீழ்த்தியது குறித்து அவர் கூறுகையில்,

‘ஐ.பி.எல்-யில் எனது முதல் ஆட்டத்திலேயே 6 விக்கெட் வீழ்த்தியதை என்னால் நம்ப முடியவில்லை. கனவு போன்று உள்ளது. இதை விட பெரிதாக நான் எதையும் எதிர்பார்க்க முடியாது. நிச்சயம் இது மறக்க முடியாத நினைவாக இருக்கும்.

எனது திறமை மீது நம்பிக்கை வைத்து திட்டமிட்டு பந்து வீசினேன். அதற்குரிய பலன் தான் இது. வார்னரின் விக்கெட்டை வீழ்த்தியதும் ஏன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தவில்லை என்று கேட்கிறீர்கள். எனது கவனம் எல்லாம் ஆட்டத்தில் வெற்றி பெறுவதில் தான் இருந்தது.

உண்மையிலேயே நான் விக்கெட் வீழ்த்துவதை கொண்டாடுவதில்லை. வெற்றியைத் தான் கொண்டாடுகிறேன். எனது குறிக்கோள் விக்கெட் வீழ்த்துவது மட்டுமல்ல, அதன் மூலம் அணிக்கு வெற்றி தேடித்தர வேண்டும்.

வெற்றிக்காக மட்டுமே விளையாடுகிறேனே தவிர, ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக அல்ல. மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இந்த கோப்பையை வெல்ல விரும்புகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers