டோனி-கோஹ்லியை விட இவர் தான் சிறந்த கேப்டன்! முன்னாள் வீரர் சேவாக் கருத்து

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணியை வழி நடத்தியவர்களில் டோனி-கோஹ்லியை விட சிறந்த கேப்டன் கங்குலி தான் என இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியை கட்டமைத்ததில் கங்குலி மற்றும் டோனிக்கு பெரிய பங்கு இருக்கிறது. டோனி ஒரு கேப்டனாக செயல்பட்டு இரண்டு உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றை வென்று கொடுத்துள்ளார்.

அதேபோல் சவுரவ் கங்குலியும் பல்வேறு சாதனைகளை செய்துள்ளார். குறிப்பாக கேப்டனாக இருந்த அசாருதீன் மீது சூதாட்ட குற்றச்சாட்டு எழுந்த சமயத்தில், கங்குலியிடம் கேப்டன் பொறுப்பு வந்தது. அவர் அணியை சிறப்பாக வழிநடத்தி, வெளிநாடுகளில் பல வெற்றிகளை குவித்தார்.

இதனால் டோனி-கங்குலி ரசிகர்கள் சிறந்த கேப்டன் யார் என்று அடிக்கடி மோதிக்கொள்வார்கள். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேவாக் அளித்த பேட்டியில் கூறுகையில்,

‘என்னைப் பொறுத்தவரை டோனி மற்றும் கோஹ்லியை விட சவுரவ் கங்குலி சிறந்த கேப்டன் என்பேன். ஓர் அணியில் அனுபவ வீரர்கள் இல்லாதபோது, கேப்டனுக்குத்தான் முழுப்பொறுப்பும்.

கங்குலி இந்திய அணிக்கு கேப்டனாகும்போது அணியில் அனுபவமில்லாத வீரர்கள் தான் இருந்தனர். நிலையில்லாத இந்திய அணியை அவர் கட்டமைத்தார்’ என தெரிவித்துள்ளார். மேலும், உலகக் கோப்பை தொடரில் இந்தியா-பாகிஸ்தான் மோதவிருக்கும் போட்டி குறித்து அவர் கூறுகையில்,

நாட்டுக்கு நல்லது எதுவோ அதைச் செய்ய வேண்டியது ஒவ்வொரு வீரரின் கடமை. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி என்றால், அது ஒரு போருக்குச் சமமானது. அந்தப் போரில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers