டோனி, பிளம்மிங்கிற்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்! 96 ஓட்டங்கள் விளாசிய வாட்சன் உருக்கம்

Report Print Kabilan in கிரிக்கெட்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவர் டோனி மற்றும் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங் ஆகியோர் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் என ஷேன் வாட்சன் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த ஐ.பி.எல் 41வது லீக் ஆட்டத்தில்க் சென்னை-ஹைதராபாத் அணிகள் மோதின. முதலில் ஆடிய ஹைதராபாத் அணி 3 விக்கெட் இழப்புக்கு 175 ஓட்டங்கள் எடுத்தது.

பின்னர் ஆடிய சென்னை அணி ஷேன் வாட்சனின் அதிரடியால் 19.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. தொடக்க வீரராக களமிறங்கிய வாட்சன் 53 பந்துகளில் 6 சிக்சர், 9 பவுண்டரிகளுடன் 96 ஓட்டங்கள் குவித்தார்.

இதுவரை இந்த சீசனில் வாட்சன் அடித்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். முன்னதாக, வாட்சனின் ஆட்டம் பெரியளவில் இல்லை என்றும், அவருக்கு பதிலாக சாம்பில்லிங்ஸை களமிறக்கலாம் என்றும் யோசனை முன்வைக்கப்பட்டது.

ஆனால், அணித்தலைவர் டோனி மற்றும் பயிற்சியாளர் பிளம்மிங் இருவரும் ஹைதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் வாட்சனுக்கு வாய்ப்பளித்தனர். அதனை அவரும் சரியாக பயன்படுத்திக் கொண்டார்.

இந்நிலையில் நேற்றைய போட்டி குறித்து வாட்சன் கூறுகையில், ‘என் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் அனைத்தும் ஓட்டங்கள் சேர்க்க முடியவில்லை என்பதற்காகத்தான். அதைத் தவிர வேறேதும் இல்லை. ஆனால், என் மீது கேப்டன் டோனியும், பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங்கும் தீவிரமான நம்பிக்கை வைத்திருந்தனர்.

அவர்கள் வைத்த நம்பிக்கைக்கு என்னால் வார்த்தைகளால் நன்றி சொல்ல முடியாது. இதற்கு முன் நான் ஏராளமான அணிகளில் விளையாடி இருக்கிறேன். இதுபோல் நான் ஓட்டங்களை எடுக்காமல் விளையாடி இருந்தால், என்னை எப்போதோ அணியில் இருந்து நீக்கி இருப்பார்கள். ஆனால் டோனியும், ஸ்டீபனும் என் மீது அசையாத நம்பிக்கை வைத்திருந்தார்கள்.

சன்ரைசர்ஸ் கேப்டன் புவனேஷ்வர் குமார் திறமையான பந்துவீச்சாளர். பந்துகளை லெக்கட்டார், இன்கட்டர் என நன்றாக ஸ்விங் செய்யும் திறமை படைத்தவராக இருக்கிறார்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்