அதிரடி ஆட்டம்.... ஆட்ட நாயகன்: மனைவியுடன் ஒரு ஜாலி பேட்டி நடத்திய ரஸ்செல்

Report Print Deepthi Deepthi in கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் 47-லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணியும், மும்பை அணியும் விளையாடியதில் ஆந்த்ரே ரஸ்செல்லின் அதிரடி ஆட்டத்தால் கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 232 ரன்கள் குவித்தது.

இந்த தொடரில் தனது 4-வது அரைசதத்தை கடந்த ஆந்த்ரே ரஸ்செல் 80 ரன்களுடனும் (40 பந்து, 6 பவுண்டரி, 8 சிக்சர்) எடுத்தார்.

தொடர்ச்சியாக 6 ஆட்டங்களில் தோற்று இருந்த கொல்கத்தா அணி மும்பையை வீழ்த்தி வெற்றி பெற்றதால் அடுத்த சுற்றிலும் வாய்ப்பு நீடித்துள்ளது.

ஆட்டநாயகன் விருது பெற்ற ஆந்த்ரே ரஸ்செல் போட்டி முடிந்தவுடன் தனது 31வது பிறந்தநாளை கொண்டாடினார்.

மேலும் , மைதானத்தில் வைத்து ரஸ்செல்லின் மனைவி ஜாசிம் லோரா தனது கணவரிடம் ஜாலியாக பேட்டி எடுத்தார்.

ஆட்டநாயகன் விருது பெற்றுள்ளேன், இந்த வெற்றி எனக்கு பிறந்தநாள் பரிசு. ரசிகர்களை குஷிப்படுத்தவும், மனைவியை கவர்ந்திழுக்கவும் என்று அதிரடியாக விளையாடுவதால் எனக்கு எப்போதும் ஒரு நெருக்கடி இருந்து கொண்டே இருக்கிறது என கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்