வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக அதிரடி சதம்! புதிய மைல்கல்லை எட்டிய வங்கதேச வீரர்

Report Print Kabilan in கிரிக்கெட்

வங்கதேச கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் வீரர் ஷகிப் அல் ஹசன், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

உலகக்கோப்பை தொடரில் நேற்று நடந்த லீக் போட்டியில், வங்கதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் அபாரமாக விளையாடிய வங்கதேச அணியின் ஆல்-ரவுண்டர் வீரர் ஷகிப் அல் ஹசன், 99 பந்துகளில் 16 பவுண்டரிகளுடன் 124 ஓட்டங்கள் குவித்து களத்தில் இருந்தார்.

இது அவருக்கு 9வது ஒருநாள் சதம் ஆகும். இந்நிலையில், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 6 ஆயிரம் ஓட்டங்கள் என்ற மைல்கல்லையும் அவர் எட்டியுள்ளார். வங்கதேச கிரிக்கெட் வரலாற்றில் தமிம் இக்பாலுக்கு பிறகு இந்த மைல்கல்லை எட்டியுள்ள இரண்டாவது வீரர் ஷகிப் தான்.

AFP

இதுவரை 202 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 9 சதங்கள் மற்றும் 44 அரைசதங்களுடன் 6,101 ஓட்டங்கள் குவித்துள்ளார். அவருக்கு முன்பாக, அதிக ஓட்டங்கள் குவித்த வங்கதேச வீரராக தமிம் இக்பால் (6,743) உள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்