இங்கிலாந்து அணியை பஞ்சராக்கிய மலிங்கா..! உலகக் கோப்பை லீக் சுற்றில் சிறந்த பந்துவீச்சு

Report Print Basu in கிரிக்கெட்

உலகக் கோப்பை அரையிறுதியை எட்டியுள்ள நிலையில், லீக் சுற்றில் யார் மிக சிறப்பாக பந்து வீசியுள்ளார் என தெரியவந்துள்ளது.

இங்கிலாந்தின் ஆடுகளத்தில் ஒவ்வொரு அணியும் அதிக ஓட்டங்களை குவித்தாலும், உலகக் கோப்பை லீக் சுற்றில் சில பந்து வீச்சாளர்கள் மிக சிறப்பாக பந்து வீசி போட்டியின் முடிவையே மாற்றி அமைத்துள்ளனர். அந்த வகையில் லீக் சுற்றில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இலங்கை வீரர் லிசித் மலிங்கா வீசியது சிறந்த பந்துவீச்சு முயற்சியாக பார்க்கப்படுகிறது.

உலகக் கோப்பையில் மோசமான தொடக்கத்துடன் ஆரம்பித்த இலங்கை அணி, நியூசிலந்து, அவுஸ்திரேலியாவுடன் தோல்வி. வங்கதேச, பாகிஸ்தான் உடனான போட்டி ரத்து. ஆப்கானுக்கு எதிராக மட்டும் வெற்றிப்பெற்றிருந்த நெருக்கடியான நிலையில் பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை எதிர்க்கொண்டது.

இங்கிலாந்து அணிக்கு எதிராக முதலில் துடுப்பாடிய இலங்கை 232 ஓட்டங்கள் எடுத்தது. இலங்கை வெற்றி பெற குறைந்த வாய்ப்பே இருந்த நிலையில், மலிங்கா தனது பந்து வீச்சால் போட்டியின் முடிவை தலைகீழாக மாற்றி அமைத்தார்.

தனது அனுபவமிக்க பந்து வீச்சால் இங்கிலாந்து ஆரம்ப துடுப்பாட்டகாரர் பேரிஸ்டோவை டக் அவுட் ஆக்கினார். பின்னர், மற்ற ஆரம்ப துடுப்பாட்டகாரரான ஜேமஸ் வின்ஸின் விக்கெட்டையும் கைப்பற்றி இங்கிலாந்து அணிக்கு நெருக்கடி நிலையை உருவாக்கினார்.

அரைசதம் கடந்த ரூட்டையும் வெளியேற்றி அசத்தினார் மலிங்கா, பட்லரையும் சாய்த்து இங்கிலாந்து அணியை பஞ்சராக்கினார். இறுதியில், இங்கிலாந்து அணி இலங்கையிடம் 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது.

வெற்றிக்கு முக்கிய காரணமான மலிங்கா, 10 ஓவர் வீசி 34 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார். 2019 உலகக் கோப்பை தொடரில் 7 போட்டிகளில் விளையாடிய மலிங்கா, 13 விக்கெட்டுகளை கைப்பற்றி தனது உலகக் கோப்பை வாழ்க்கையை முடித்தார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...