டோனி ரன் அவுட் ஆனது இப்படி தான்... ஐசிசி வெளியிட்ட வீடியோவைக் கண்டு கலங்கும் ரசிகர்கள்

Report Print Santhan in கிரிக்கெட்

நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டியில் டோனியின் ரன் அவுட் திருப்பு முனையை ஏற்படுத்திய நிலையில், அதன் வீடியோவை ஐசிசி வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்து நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கெதிரான அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இதில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான டோனி, கடைசி வரை களத்தில் நின்று நியூசிலாந்து அணிக்கு பீதியை ஏற்படுத்தி வந்தார். அதே போன்று அவ்வபோது இரண்டு, ஒன்று என்று அணியை வெற்றிக்கு அருகில் கொண்டு சென்றார்.

அப்படி அடித்து ஆடிக் கொண்டிருக்கும் போது, ஆட்டத்தின் 48.2-வது பந்தை டோனி அடித்து ஆட முற்பட்டார். ஆனால் பந்தானது லெக் திசையில் சென்றதால், இரண்டு ஓட்டங்கள் எடுக்க முயன்றார்.

ஆனால் கப்திலின் அற்புதமான த்ரோவால் அவுட்டாக இந்திய அணியின் தோல்வி உறுதியானது. தற்போது அந்த வீடியோவை ஐசிசி வெளியிட்டுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்