சொந்த நாட்டை விட்டு வேறு நாட்டிற்கு உலகக்கோப்பை வாங்கிக் கொடுத்த மோர்கன்! கடவுளாக மாறிய ஸ்டோக்ஸ் பேட்

Report Print Santhan in கிரிக்கெட்

இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் அந்தணியின் தலைவரான மோர்கன் சொந்த நாட்டை விட்டு மாற்று நாட்டிற்கு உலகக்கோப்பை வாங்கிக் கொடுத்த தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

கடந்த மே மாதம் துவங்கிய உலகக்கோப்பை தொடர் நேற்றோடு முடிவுக்கு வந்தது. இதில் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி அதிக பவுண்டரி வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த உலகக்கோப்பை போட்டியில் நடந்த சில சுவாரஸ்ய தகவல்களை பார்ப்போம்.

குறிப்பாக நேற்றைய இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமே, ஸ்டோக்ஸ் ஓட்டம் ஓடும் போது, பேட்டின் மீது பந்து பட்டதால், அது நான்கு ஓட்டங்கள் மற்றும் 2 ஓட்டங்கள் என ஆறு ஓட்டங்களாக மாறியது. இதனால் பேட்டை இங்கிலாந்து மக்கள் Bat of God என்று கூறி வருகின்றனர்.

உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் தொடர்ச்சியாக 3 மெய்டன் ஓவர்களை வீசிய அணி என்ற பெருமையை நியூசிலாந்து பெற்றுள்ளது. இங்கிலாந்து பேட்டிங் செய்த 10 முதல் 12 ஓவர்கள் வரை நியூசிலாந்து அணி ஒரு ரன் கூட விட்டுக்கொடுக்கவில்லை.

இந்த உலகக்கோப்பை போட்டியில் தொடர் நாயகன் விருது வில்லியம்சனுக்கு வழங்கப்பட்டது. இதற்கு முன் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் தோற்ற அணியில் இருந்த சச்சினுக்கு வழங்கப்பட்டது. அதன் பின் தற்போது வில்லியம்சனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

சொந்த நாட்டை விட்டு, மாற்று நாட்டுக்கு உலகக்கோப்பையை வென்று தந்த தலைவர் என்ற வித்தியாசமான சாதனைக்கு இங்கிலாந்தின் மோர்கன் சொந்தக்காரர் ஆகியுள்ளார். இவருடைய பூர்வீகம் அயர்லாந்து ஆகும்.

இந்த உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி மொத்தமாகவே ஒரே ஒரு நோ-பால் மட்டுமே வீசியுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் கிறிஸ் வோக்ஸ் வீசிய அந்த நோ-பால் தான், இந்த உலகக்கோப்பையில், அந்த அணி வீசிய முதல் மற்றும் கடைசி நோ-பால் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்