உலகக்கோப்பையில் படுதோல்வி! இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு நேரப்போகும் கதி?

Report Print Raju Raju in கிரிக்கெட்

இந்திய அணி உலகக்கோப்பையில் இருந்து வெளியேறியுள்ள நிலையில் அணியின் பயிற்சியாளர் பொறுப்புக்கு பிசிசிஐ விண்ணப்பம் கோருகிறது.

இந்திய அணியின் பயிற்சிக் குழுவின் பதவிக்காலம் வரும் செப்டம்பருடன் முடிவுக்கு வருகிறது.

இந்த குழுவில் இடம் பெற்றுள்ள ரவிசாஸ்திரி, சஞ்சய் பாங்கர், பாரத் அருண், ஆர்.ஸ்ரீதர் ஆகியோரது பதவிக்காலம் 45 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் மேற்கு இந்திய தீவுகள் தொடருடன் இவர்களது பதவிக்காலம் முடிகிறது. இவர்கள் அனைவரும் மீண்டும் பயிற்சியாளர், உதவிப்பயிற்சியாளர்களாக மீண்டும் பிசிசிஐ-யிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்திய அணி உலக கோப்பை அரை இறுதி போட்டியில் படு தோல்வி அடைந்து வெளியேறியதையடுத்து, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மீது விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன.

இதனால், ரவிசாஸ்திரி பதவிக்காலம் நீடிப்பது கடினம் என்று தெரிகிறது.

கடந்த 2017 ஆம் ஆண்டு ரவி சாஸ்திரி இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers