இலங்கைக்கு எதிரான தொடர்: கழற்றி விடப்பட்ட வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹசன்

Report Print Kabilan in கிரிக்கெட்

இலங்கை தொடருக்கான வங்கதேச அணியில் ஷாகிப் அல் ஹசனுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

உலகக்கோப்பை தொடரில் லீக் சுற்றுடன் வெளியேறிய வங்கதேச அணி, அடுத்ததாக இலங்கைக்கு சென்று விளையாட உள்ளது. இந்தச் சுற்றுப்பயணத்தில் ஜூலை 26, 28 மற்றும் 31 ஆகிய திகதிகளில் ஒருநாள் தொடரில் வங்கதேசம் விளையாடுகிறது.

இந்த தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள வங்கதேச அணியில் ஷாகிப் அல் ஹசனின் பெயர் இடம்பெறவில்லை. அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விக்கெட் கீப்பர் லித்தோன் தாஸும் தனிப்பட்ட காரணத்திற்காக தொடரில் இருந்து விலகியுள்ள நிலையில், மோர்தசா கேப்டனாக செயல்பட உள்ளார்.

வங்கதேச அணி விபரம்
 • மோர்தசா
 • தமிம் இக்பால்
 • சௌமியா சர்க்கார்
 • அனாமுல் ஹக்யூ
 • முகமது மிதுன்
 • முஷ்பிகுர் ரஹிம்
 • மக்முதுல்லா ரியாத்
 • மொசாடெக் ஹொசைன்
 • சபீர் ரஹ்மான்
 • மெஹிதி ஹசன்
 • தைஜூல் இஸ்லாம்
 • ருபெல் ஹொசைன்
 • முகமது ஷாய்புதின்
 • முஸ்டாபிஜூர் ரஹ்மான்

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்