சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து மலிங்கா ஓய்வு? அவுஸ்திரேலியா கிரிக்கெட்டில் இணைகிறார்

Report Print Basu in கிரிக்கெட்

இலங்கை நட்சத்திர வீரர் லிசித் மலிங்கா ஓய்வு பெறும் தேதி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வங்க தேச அணி, 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாட உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி ஜூலை 23ம் தேதி கொழும்பு மைதானத்தில் நடைபெறவுள்ளது.

வங்கதேச அணிக்கு எதிரான இலங்கை அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சளார் லசித் மலிங்கா இடம் பிடித்துள்ளார். மலிங்கா ஓய்வுக்கு பின்னர் அவுஸ்திரேலியாவில் நிரந்திமாக குடியேறுவார் என தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், வங்கதேச அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டிக்கு பின்னர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து லசித் மலிங்கா ஓய்வு பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பின்னர், குடும்பத்துடன் அவுஸ்திரேலியாவில் குடியேறும் மலிங்கா, அங்கு பயிற்சி அளிக்கும் வேலையை மேற்கொள்ளலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

தற்போது, அவுஸ்திரேலியாவில் உள்ள மலிங்கா, வங்கதேச அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டிககு முன்னர், அதாவது ஜூலை 22ம் தேதி இலங்கை திரும்புவாராம். இதுதொடர்பாக இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளர் அசந்தா டி மெலிடம் அறிவித்து விட்டாராம்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers