இனிமே தான் எங்க ஆட்டத்தை பார்க்க போறீங்க... வங்கதேச அணியை துவம்சம் செய்த பின் இலங்கை கேப்டன் பேட்டி

Report Print Santhan in கிரிக்கெட்
477Shares

வங்கதேச அணிகெதிரான் ஒரு தொடரை முழுவதுமாக இலங்கை அணி கைப்பற்றியுள்ள நிலையில், இது தான் ஆரம்பம் இனிமேல் எங்களின் ஆட்டம் அனல் பறக்கும் என்று அணியின் தலைவர் கருணாரத்னே கூறியுள்ளார்.

வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி அங்கு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது, இதில் மூன்று போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றி பெற்று, வங்கதேச அணியை வொயிட் வாஷ் செய்தது.

44 மாதங்களுக்கு பின் இலங்கை அணி வொயிட் வாஷ் செய்துள்ளதால், அந்தணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் இலங்கை அணியின் தலைவரான டிமுத் கருணரத்னே இந்த தொடர் குறித்து கூறுகையில், உலகக்கோப்பை தொடருக்கு பின் விளையாடிய முதல் தொடரிலே ஒரு அற்புதமான வெற்றி, இது தான் தொடக்கம்.

இனி வரும் ஆட்டங்கள் மூலம் புதிய திறமையான வீரர்களை தேர்ந்தெடுத்து, அடுத்து வரும் உலகக்கோப்பை தொடருக்கு சரியான 15 வீரர்களை தேர்வு செய்யும் நோக்கில் விளையாடி வருகிறோம்.

நீண்ட ஆண்டுகளுக்கு பின் இப்படி ஒரு வெற்றி, இதனால் இது இப்போது நாம் கொண்டாட வேண்டிய தருணம், இன்று கொண்டாடுவோம், நாளை நியூசிலாந்து அணிக்கெதிரான தொடரை எப்படி சமாளிப்பது, எப்படி வெற்றி கொள்வது என்பது குறித்து சிந்திப்போம் என்று கூறியுள்ளார்.

மேலும் ஓய்வு பெற்ற மலிங்கா குறித்து கூறுகையில், அவரிடமிருந்து நிறைய விஷயங்களை கற்றுள்ளேன். அவர் ஒரு அற்புதமான வீரர், அவர் மட்டுமின்றி மேத்யூஸ் மற்றும் குலசேகராவிடமிருந்தும் பல விஷயங்களை கற்றுள்ளேன், இவர்கள் தலைவராக எப்படி இருக்க வேண்டும், அணியை எப்படி கொண்டு செல்ல வேண்டும், போன்ற பல அனுபவங்களை என்னிடம் பகிர்ந்துள்ளனர் என கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்