தனது சாதனையை முறியடித்த உடனேயே கோஹ்லிக்கு வாழ்த்து கூறிய கங்குலி!

Report Print Kabilan in கிரிக்கெட்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நேற்று நடந்த ஒருநாள் போட்டியில், சதம் விளாசி சாதனை படைத்த விராட் கோஹ்லிக்கு, முன்னாள் அணித்தலைவர் கங்குலி வாழ்த்து தெரிவித்தார்.

இந்தியா-மேற்கிந்திய தீவுகள் மோதிய 2வது ஒருநாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நேற்று நடந்தது. இந்தப் போட்டியில் இந்திய அணி 59 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது.

இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி 120 ஓட்டங்கள் விளாசினார். இது கோஹ்லி 42வது ஒருநாள் போட்டியாகும். இதன்மூலம், இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் சவுரவ் கங்குலியின் சாதனையை முறியடித்தார்.

கங்குலி 311 ஒருநாள் போட்டிகளில் 11,363 ஓட்டங்கள் குவித்துள்ளார். ஆனால், கோஹ்லி 238 ஒருநாள் போட்டிகளில் 11,406 ஓட்டங்கள் குவித்து, அதிக ஓட்டங்கள் குவித்த 2வது இந்திய அணி வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் 18,426 ஓட்டங்களுடன் முதலிடத்தில் உள்ளார். தனது சாதனையை கோஹ்லி முறியடித்த உடனேயே கங்குலி அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்தார். அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில்,

‘ஒருநாள் போட்டிகளில் விராட் கோஹ்லி மற்றொரு Master Class துடுப்பாட்ட வீரர்.. என்ன ஒரு வீரர்!’ என வியந்து புகழ்ந்துள்ளார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் கோஹ்லி இரண்டாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...