தேங்கிய நீரில் அசத்தலாக துடுப்பாட்டம் செய்யும் சச்சின் டெண்டுல்கர்! வீடியோ

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர், நீர் தேங்கிய இடத்தில் துடுப்பாட்ட பயிற்சி செய்யும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கிரிக்கெட் உலகில் பல முக்கிய சாதனைகளை படைத்தவர் சச்சின் டெண்டுல்கர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான இவர், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர் என்ற சாதனையை வைத்துள்ளார்.

அத்துடன் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மொத்தமாக 100 சதங்கள் அடித்த வீரர் என பல சாதனைகளையும் படைத்துள்ளார். 2013ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற சச்சின், தனது ட்விட்டர் பக்கத்தில் அவ்வப்போது தனது கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்.

இந்நிலையில், தேங்கி நிற்கும் தண்ணீர் பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ளார். அதில் எதிரில் இருந்து வீசப்படும் பந்துகளை அநாயசமாக எதிர்கொள்கிறார்.

மேலும், ‘கிரிக்கெட் மீது உள்ள ஆர்வமும், காதலும் எப்போதும் பயிற்சி செய்ய புதிய முறைகளை கற்று தரும். அத்துடன் நாம் என்ன செய்கிறோமோ அதனை நாம் அனுபவித்து செய்ய வேண்டும்’ என பதிவிட்டுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்