39 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகள்: இரண்டாம் நாள் முடிவில் தென்னாப்பிரிக்கா பரிதாபம்

Report Print Arbin Arbin in கிரிக்கெட்

இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 39 ஓட்டங்களுக்கு தென்னாப்பிரிக்கா 3 விக்கெட்டுகளை இழந்து பரிதாப நிலையில் உள்ளது.

இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி விசாக்கப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் நாணய சுழ்ற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பாட்டம் தெரிவு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் ஷர்மா மற்றும் மயாங்க் அகர்வால் சிறப்பான தொடக்கத்தை வெளிப்படுத்தினர். இருவரும் சதம் அடித்தனர்.

ரோகித் ஷர்மா 176 (244) ஓட்டங்கள் எடுத்து ஆட்டத்தில் இருந்து வெளியேறினார். தொடர்ந்து விளையாடிய மயாங்க் இரட்டை சதம் அடித்து அசத்தினார்.

பின்னர் 215 (371) ஓட்டங்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து 136 ஓவர்கள் விளையாடிய இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 502 ஓட்டங்கள் குவித்து டிக்ளர் செய்தது.

இதையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி தொடக்கத்திலேயே விக்கெட்டை இழந்தது. அஸ்வின் வீசிய பந்தில் மார்கம் 5 (21) ஓட்டங்களில் ஸ்டம்ப் அவுட் ஆனார்.

அதைத் தொடர்ந்து தியுனிஸ் டி புருயின் 4 (25) ஓட்டங்களில் அஸ்வின் வீசிய பந்தில் நடையைக்கட்டினார்.

பின்னர் வந்த டேன் ரன் எதுவும் எடுக்காமல் ஜடேஜா பந்தில் போல்ட் ஆனார். இதனால் தென்னாப்பிரிக்க அணி 2ஆம் நாள் முடிவில் 39 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்