வெளிநாட்டு மண்ணில் வரலாற்று சாதனை படைத்த இலங்கை கிரிக்கெட் அணி! புகழ்ந்து தள்ளிய ஜெயவர்தனே

Report Print Raju Raju in கிரிக்கெட்

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை முழுமையாக கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்த இலங்கை அணிக்கு ஜாம்பவான் ஜெயவர்தனே வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது.

இதில் முதல் இரண்டு போட்டிகளில் வென்று தொடரை இலங்கை கைப்பற்றியது.

நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியிலும் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரை முழுவதுமாக வென்றது.

இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் அணிகள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி வரலாற்று சாதனை படைத்ததோடு முதல்முறையாக அந்த அணிக்கு எதிராக டி20 தொடரை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் இலங்கை அணிக்கு மஹேலே ஜெயவர்தனே வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

இது குறித்த அவரின் டுவிட்டர் பதிவில், குழுவாக அற்புத முயற்சி எடுத்து டி20 தொடரை வென்ற இலங்கை அணிக்கு வாழ்த்துக்கள்.

சில புதிய வீரர்களின் தனித்துவமான திறமை வெளியானது. அடுத்த ஆண்டு உலகக்கோப்பை தொடருக்கு இதை போலவே உருவாக்குவோம் என பதிவிட்டுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்