இந்திய அணியுடன் இப்படி அடிவாங்குவதற்கு யார் காரணம்? தென் ஆப்பிரிக்கா பயிற்சியாளர் புலம்பல்

Report Print Santhan in கிரிக்கெட்
330Shares

இந்திய அணிக்கெதிரான ஆட்டத்தில் எங்களின் வேகப்பந்து வீச்சாளர்கள் அந்தளவிற்கு போதுமான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்று வருத்தமாக கூறியுள்ளார்.

தென் ஆப்பிரிக்கா-இந்தியா அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்பிற்கு 601 ஓட்டங்கள் எடுத்து டிக்ளர் செய்தது.

அதன் பின் முதல் இன்னிங்ஸ் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி, இந்திய அணியின் வேகத்தை தாக்கு பிடிக்க முடியாமல் 275 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து மோசமான நிலையில் உள்ளது.

முதல் போட்டியில் தோல்வி, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி சொதப்பி வரும் நிலையில், அந்தணியின் பயிற்சியாளர் எனோச் நிக்வி கூறுகையில், இந்திய அணியை ஆதிக்கம் செலுத்தவிட்டதற்கு நாங்கள் எங்களைத்தான் குறைசொல்லிக்கொள்ள வேண்டும்.

வேகப்பந்து வீச்சுக்கு ஏற்ற ஆடுகளமாக இருந்தும்கூட, எங்களால் சிறப்பாக செயல்படமுடியவில்லை. ஸ்டம்புக்கு நேராக அதிகமாக வீசாமல், சற்று வைடாக வீசிவிட்டனர்.

இந்திய துடுப்பாட்ட வீரர்கள் போதுமான அளவிற்கு பரிசோதிக்கவில்லை. இந்திய துடுப்பாட்ட வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி அடித்து ஆட விட்டுவிட்டோம் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்