டோனி... இனி சென்னை அணிக்காக விளையாடுவாரா? சிஎஸ்கே உரிமையாளர் முக்கிய அறிவிப்பு

Report Print Basu in கிரிக்கெட்

இந்திய நட்சத்திர வீரர் டோனி, 2020 ஐபிஎல்-க்கு பிறகு சென்னை அணியில் விளையாடுவாரா என்பது குறித்து அணியின் உரிமையாளர் சீனிவாசன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஒவ்வொரு சீசனிலும் சி.எஸ்.கே-க்காக டோனி விளையாடிய ஒவ்வொரு ஆட்டத்திலும் அவரே அணியை வழிநடத்தியுள்ளார், மேலும் டோனி சென்னை அணியின் மிகப்பெரிய வீரராக திகழ்கிறார்.

ஓய்வுக்குப் பிறகும், அவர் சென்னையின் பயிற்சியாளராக கூட பணியாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூலை 2019 முதல் டோனி எந்த விதமான கிரிக்கெட்டிலும் விளையாடவில்லை. அவர் கடைசியாக நியூசிலாந்திற்கு எதிராக 2019 உலகக் கோப்பையில் விளையாடினார்.

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றி சென்னை அணி உரிமையாளர் சீனிவாசன், டோனி குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

டோனி இந்த ஆண்டு விளையாடுவார். அடுத்த ஆண்டு அவர் ஏலத்தில் விடப்டுவார். அவரை மீண்டும் சென்னை அணி தக்கவைக்கும். ஐபிஎல் 2021-ல் டோனி சென்னை அணியில் விளையாடுவார் என அறிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...